இந்தியாவில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 106 இலட்சத்தை நெருங்கியது

202007111228317170 Tamil News Coronavirus 64 Positive cases in Pondicherry SECVPF 1
202007111228317170 Tamil News Coronavirus 64 Positive cases in Pondicherry SECVPF 1

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத்தை அடைந்து­­­ வரும் நிலையில், இன்று இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக கொரோனா தொற்று எண்ணிக்கை பதிவாகியிருக்கிறது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 106 இலட்சத்தை நெருங்கியது. 102 இலட்சம் பேர் குணமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. அதே சமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் மொத்தமாக 105 இலட்சத்து 95 ஆயிரத்து 660 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 102 இலட்சத்து 45 ஆயிரத்து 741 பேர் குணமடைந் துள்ளனர், 1 இலட்சத்து 97 ஆயிரத்து 201 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,52,718 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.