அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை அதிபராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றார். தற்போதைய அதிபரான டொனால்டு டிரம்ப் மற்றும் துணை அதிபரான மைக் பென்ஸ் தோல்வியடைந்தனர்.
அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன் தற்போது பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளார்.
இந்நிலையில், ஜோ பைடன் தனது டுவிட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ள பதிவில், ‘அமெரிக்காவில் இது ஒரு புதிய நாள்’ என தெரிவித்துள்ளார்.