ஜேர்மனியில் பெப்ரவரி 14ஆம் திகதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

images 6
images 6

ஜேர்மனியில் கொரோனாத் தொற்றின் பரவலை கட்டுப்படுத்த பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கல் அறிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்றின் 2 ஆவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் ஜேர்மனியில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் வினியோகிக்கும் கடைகள் மட்டுமே திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணி செய்ய நிறுவனங்கள் அனுமதிக்க வேண்டும் என்றும் அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.