இந்தோனேசியாவில் 10 இலட்சத்தை கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

110914590 be6b51c2 3929 4683 ae5d f479955f5f98 4
110914590 be6b51c2 3929 4683 ae5d f479955f5f98 4

கொரோனா வைரசால் மோசமாக பாதிக்கப்பட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இந்தோனேஷியாவும் ஒன்று.

இந்த நிலையில் அந்த நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 10 இலட்சத்தை கடந்துள்ளது.

இதுகுறித்து இந்தோனேசியாவின் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 24 மணி நேரத்தில் 13 ஆயிரத்து 94 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மொத்த பாதிப்பு 10 இலட்சத்து 12 ஆயிரத்து 350 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கொரோனா பலி எண்ணிக்கை 28 ஆயிரத்து 468 ஆக அதிகரித்துள்ளது” என கூறப்பட்டுள்ளது.

மக்கள் தொகையில் உலகின் 4-வது மிகப்பெரிய நாடான இந்தோனேசியாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர்தான் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

சுகாதார ஊழியர்கள், ராணுவ வீரர்கள், காவல்துறையினர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பொது பணியாளர்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.