அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் நிதியமைச்சராக 74 வயதுடைய ஜனத் யெல்லன் நியமனம்!

ec5cabc3 7698 4de7 98b3 987693db84df
ec5cabc3 7698 4de7 98b3 987693db84df

அமெரிக்காவில் ஜனாதிபதி பைடன் புதிதாக ஆட்சி அமைத்துள்ள நிலையில், அமெரிக்காவின் நிதியமைச்சராக 74 வயதுடைய ஜனத் யெல்லன் என்ற பெண்மணி பதவியேற்றுள்ளார்.

அமெரிக்க வரலாற்றில், முதல் பெண் நிதியமைச்சர் இவரென்பதுவும் குறிப்பிடதக்கது.

இவரை தேர்வு செய்வதற்காக செனட் சபையில் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில், 84 உறுப்பினர்கள் யெல்லனுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தமையும் குறிப்பிடதக்கது.

மேலும், அமெரிக்க ஜனாதிபதி பைடன், பொருளாதார ஊக்குவிக்கு தொகுப்பை அறிவித்து உள்ள நிலையிலேயே, நிதி அமைச்சராக ஜனத் யெல்லன் பதவியேற்று இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.