இந்தியாவின் உத்தரகாண்டில் பனிப்பாறை உருகி வெள்ளம்: 7 பேர் மரணம்

uttharakand
uttharakand

உத்தரகாண்டில் இடம்பெற்ற பனிச்சரிவில் சிக்கிய 7 பேரின் சடலங்கள் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளன

அத்துடன் மேலும் 170 பேர் காணாமல் போயுள்ளதாக இந்திய ஊடகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

உத்தரகாண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் பாரிய பனிப்பாறை வெடிப்பு ஒன்று ஏற்பட்டதை அடுத்து பனிச்சரிவினால் அலக்நன்தா மற்றும் தௌலிகங்கா ஆறுகளில் வெள்ளம் அதிகரித்திருந்தது.

இதனால் குறித்த ஆறுகளை அண்டிய பிரதேசங்களில் பெரும் அனர்த்தம் பதிவாகி இருப்பதாகவும் சில வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் இதுவரையில் 6 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் காணாமல் போயுள்ளவர்களை தேடும் பணிகள் இந்திய கடற்படையினர் மற்றும் இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை காணாமல் போயுள்ளவர்களுக்காக அனைவரது பிரார்த்தனைகளும் உள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அத்துடன் உத்தரகாண்ட் மாநிலத்துடன் இந்தியா துணை நிற்கும் எனவும் அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உத்தரகாண்ட் மாநிலத்தின் முதலமைச்சர் சம்பவ இடத்திற்கு சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.