சூடான் தீ விபத்தில் 23 பேர் பலி

sudan
sudan

சூடான் நாட்டின் செராமிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயினால் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

130 இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

தொழிற்சாலை வளாகத்திற்குள் நின்று கொண்டிருந்த எரிபொருள் நிரம்பிய வண்டி வெடித்து சிதறியதில் ஏற்பட்ட தீ தொழிற்சாலைக்கும் பரவியது.

இதில் உயிரிழந்தவர்களில் 18 பேர் இந்தியர்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொழிற்சாலையில் 50 இற்கும் அதிகமான இந்தியர்கள் வேலை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.