அமீரகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 9 பேர் பலி!

625.500.560.350.160.300.053.800.900.160.90 99 1
625.500.560.350.160.300.053.800.900.160.90 99 1

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட ஒரு இலட்சத்து 66 ஆயிரத்து 879 டி பி ஐ மற்றும் பி சி ஆர் பரிசோதனை முடிவுகளில் 3 ஆயிரத்து 539 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் தற்போது பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 36 ஆயிரத்து 142 ஆக உயர்ந்துள்ளது.

இதில் நேற்று மட்டும் 2 ஆயிரத்து 993 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் தற்போது குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 16 ஆயிரத்து 53 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று ஒரே நாளில் 9 பேர் பலியானார்கள். இதனால் தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 956 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 19 ஆயிரத்து 133 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.