கொரோனாவால் பல்வேறு நாடுகளில் 2 ஆயிரத்து 72 இந்தியா்கள் உயிரிழப்பு

202006220903239157 Integrated In Vellore and Thiruvannamalai districts Corona SECVPF
202006220903239157 Integrated In Vellore and Thiruvannamalai districts Corona SECVPF

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக  2 ஆயிரத்து 72 பேர் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.முரளீதரன் தெரிவிக்கையில்,  கொரோனா தாக்குதலால் பல்வேறு நாடுகளில் 2 ஆயிரத்து 72 இந்தியா்கள் உயிரிழந்தனா்.

அதில் அதிகபட்சமாக சவூதி அரேபியாவில் 906 பேரும், அதற்கு அடுத்ததாக ஐக்கிய அரபு அமீரகத்தில் 375 பேரும் உயிரிழந்தனா். இதேபோல்  குவைத்தில் 369 பேரும், ஓமனில் 166 பேரும் உயிரிழந்தனா்.

கட்டாரில் 34 போ், பஹ்ரைனில் 48 போ், சூடான் மற்றும் நைஜீரியாவில் தலா 23 போ் உயிரிழந்தனா். இத்தாலியில் 15 பேரும், பிரான்ஸில் 7 பேரும், நேபாளத்தில் 9 பேரும்,  ஈரானில் 6 பேரும்,  ஈராக்கில் 7 பேரும் உயிரிழந்தனா்” எனத் தெரிவித்துள்ளார்.