மியன்மாரில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் பகுதிகளில் இராணுவ யுத்த வாகனங்கள்

images 2 1
images 2 1

மியன்மாரில் உள்ள பல நகரங்களில் இராணுவ யுத்த வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

அங்கு இடம்பெற்ற இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் பகுதிகளில் குறித்த யுத்த வாகனங்கள் தரிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மியன்மாரில் ஜனநாயக ரீதியிலான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வரும் சூழலில், இணைய வசதிகள் முடக்கப்படுகின்றமை மற்றும் இராணுவ யுத்த வாகனங்கள் தரிக்கப்படுகின்றமை அங்குள்ள மக்களின் பாதுகாப்பில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சபை குற்றம் சுமத்தியுள்ளது.

இதற்கு அந்த நாட்டு அதிகாரிகள் பொறுப்புக்கூறல்களை வழங்க வேண்டும் எனவும் அந்த சபையின் சிறப்பு அறிக்கையாளர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மியன்மாரில் கடந்த முதலாம் திகதி முதலாவது நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவிருந்த நிலையில், தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.