உலகம் முழுவதிலும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 10 சதவீதத்தினால் குறைவடைந்தது

download 9 2
download 9 2

கடந்த வாரத்தினுள் உலகம் முழுவதிலும் பதிவாகும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 10 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதுடன், புதிதாக பதிவாகும் தொற்றாளர்கள் எண்ணிக்கை 16 சதவீதத்தினால் குறைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதானி டெட்ரோஸ் எட்னம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ஆபிரிக்கா மற்றும் மேற்கு பசுபிக் பிராந்தியத்தில் தொற்றாளர்கள் பதிவாவது 20 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளது என்றார்.

அவ்வாறே, தென்கிழக்காசிய வலயத்தில் தொற்றாளர்கள் பதிவாகும் எண்ணிக்கை 13 சதவீதத்தினாலும் அமெரிக்க வலயத்தில் தொற்றாளர்கள் பதிவாகும் எண்ணிக்கை 16 சதவீதத்தினாலும் குறைவடைந்துள்ளது.

கடந்த வாரத்தினுள் ஐரோப்பிய வலயத்தினுள் தொற்றாளர்கள் பதிவாகும் தொகை 16 சதவீதத்தினாலும் குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதானி, கிழக்கு மத்திய தரைகடல் பிராந்தியத்தில் தொற்றாளர்கள் பதிவாகும் தொகை 7 சதவீத அதிகரிப்பை காட்டுவதாகும் தெரிவித்தார்.