ஓமனில் ஒரே நாளில் 337 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

0223 637227363939888106
0223 637227363939888106

ஓமனில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில் 337 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் ஓமன் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 37 ஆயிரத்து 929 ஆக உயர்ந்துள்ளது.

இதில் நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 252 பேர் பூரண குணமடைந்தனர். இதனால் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 29 ஆயிரத்து 543 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக நேற்று ஒருவர் பலியானார். இதனால் மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 1,544 ஆக அதிகரித்தது. தற்போது உடல்நலக்குறைவால் 42 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.