பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதிக்கு 2ஆவது குழந்தை

ghhjjh
ghhjjh

பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதிக்கு 2ஆவது குழந்தை பிறக்கவுள்ளது.

அமெரிக்காவில் வசித்து வரும் இளவரசர் ஹரி–மேகன் தம்பதிக்கு கடந்த 2019இல் முதலில் ஆண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு ஹரி மடியில் மேகன் படுத்திருக்கும் புகைப்படத்தை அவர்கள் வெளியிட்டிருந்தனர்.

அந்தப் புகைப்படம் மூலம் மேகன் 2ஆவதாக கருவுற்றிருப்பது உறுதியாகியுள்ளது.

இந்த செய்தியை அறிந்து இங்கிலாந்து மகாராணி உள்ளிட்ட அரச குடும்பத்தினர் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.

‘ஹரி தம்பதிக்கு வாழ்த்துகள்’ என லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஹரி கடந்த வருடம் மார்ச் மாதம் அரச வாழ்க்கையை விட்டு விலகுவதாக அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து தனது மனைவியுடன் இங்கிலாந்து அரண்மனையை விட்டு வெளியேறினார்.

தற்போது அவர் தனது மனைவி மேகன் மெர்கலுடன் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.