தென் ஆப்பிரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஆரம்பம்!

202008111334067441 Tamil News corona infection for 54 person in ariyalur district SECVPF
202008111334067441 Tamil News corona infection for 54 person in ariyalur district SECVPF

தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தடுப்பு மருந்தை செலுத்தும் பணியை தென் ஆப்பிரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் பரவும் புதியவகை உருமாற்றம் அடைந்த கொரோனா வைரசுக்கு எதிராக அஸ்ட்ராஜெனகா கொரோனா தடுப்பு மருந்து செயல்படாத காரணத்தால் அதனை பயன்படுத்துவதை அரசு நிறுத்தியது. அந்த மருந்துக்கு பதிலாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்து பயன்படுத்தப்படும் என்று தென் ஆப்பிரிக்க சுகாதாரத் துறை அறிவித்தது.

அதன்படி ஜான்சன் அண்ட் ஜான்சன் மருந்தை பயன்படுத்தி கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. முதற்கட்டமாக சுகாதாரத்துறையினர் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதிபர் சிரில் ராமபோசா மற்றும் சுகாதாரத்துறை மந்திரி ஸ்வேலி மிகைஸ் ஆகியோரும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி பாதுகாப்பான மற்றும் செயல்திறன் மிக்கதாக விரிவான சோதனைகளில் உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், சுகாதாரப் பணியாளர்களை நோய் மற்றும் மரணத்திலிருந்து இந்த மருந்து பாதுகாக்கும் என்றும் அதிபர் சிரில் ராமபோசா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.