எனது தந்தையை கொலை செய்தவர்களை மன்னித்து விட்டேன் – ராகுல் காந்தி

Rahul Gandhi 1
Rahul Gandhi 1

தமது தந்தையை கொலை செய்தவர்களை தாம் மன்னித்து விட்டதாக இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியிலுள்ள பல்கலைகழகம் ஒன்றில் மாணவர்களுடன் கலந்துரையாடிய போது அவர் இதனை குறிப்பிட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்கொலைதாரி ஒருவர் நடத்திய தாக்குதலில் ராகுல் காந்தியின் தந்தையான இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தில் குற்றவாளிகளாக பெயரிடப்பட்டு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ள 7 பேரையும் விடுவிக்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்ற நிலையில் ராகுல் காந்தி இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

தமது தந்தை கொல்லப்பட்ட சந்தர்ப்பத்தில் தாம் மிகுந்த வேதனை அடைந்ததாகவும் தற்போது அது குறித்து கோபமடையவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தாம் யாரையும் வெறுக்கவில்லை எனவும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.