பெருவில் தொற்றினால் 45ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

coronabusiness 1588833381344
coronabusiness 1588833381344

பெருவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால். உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 45ஆயிரத்தைக் கடந்தது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பெருவில் மொத்தமாக 45ஆயிரத்து 97பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 18ஆவது நாடாக விளங்கும் பெருவில், இதுவரை மொத்தமாக 12இலட்சத்து 83ஆயிரத்து 309பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஏழாயிரத்து 410பேர் பாதிக்கப்பட்டதோடு 220பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 54ஆயிரத்து 974பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதில் இரண்டாயிரத்து 80பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

இதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 11இலட்சத்து 83ஆயிரத்து 238பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.