கருவுற்ற செய்தியை லொத்தர் சீட்டு மூலம் கணவருக்கு அறிவித்த பெண்

1613740333508 tdy pop 8a hoda boost scratch off baby 210219 1920x1080
1613740333508 tdy pop 8a hoda boost scratch off baby 210219 1920x1080

அமெரிக்காவில் டிக்டாக் மூலம் பிரபலமான பெண் ஒருவர் தான் கருவுற்ற செய்தியை வித்தியாசமாக லொத்தர் சீட்டு மூலம் கணவரிடம்  தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் அரிசோனா பகுதியை சேர்ந்த ஹைலிபேஸ்பெண் டிக்டொக் மூலம் பிரபலம் ஆனவர். இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போதுஅவர் மீண்டும் கருவுற்றுள்ளார்.

இந்த தகவலை ஹைலி தனது கணவரிடம் தெரிவிக்க வினோத முறையை பின்பற்றினார்.

அதற்கு தனது கணவரின் மகிழ்ச்சி எவ்வாறு இருக்கும் என்பதை அறிய கருவுற்ற தகவலை கணொளியாக இந்த காணொளி 6 நிமிடங்கள் ஓடுகிறது.

அதில் தான் கருவுற்ற செய்தியை தனது கணவரிடம் இன்ப அதிர்ச்சியாக தெரிவிக்கும் வகையில் பதிவு செய்துள்ளார். இதற்கு அவர் ஒரு அட்டையில் லொத்தர் சீட்டை பயன்படுத்தியுள்ளார்.

அந்த லாட்டரி சீட்டை தனது கணவரிடம் கொடுத்து அதில் என்ன பரிசு கிடைத்திருக்கிறது என்பதை பார்க்கச் சொல்கிறார். அதன்படி அவரது கணவர் அந்த லாட்டரி சீட்டை சுரண்டி பார்க்கிறார்.

அதில் ‘பேபி’ என்று எழுதப்பட்டு இருக்கிறது. அதை பார்த்து குழம்பினார். தொடர்ந்து புன்னகை செய்யும் மனைவியை கண்டு உண்மையை புரிந்து கொள்ளும் கணவர் ஆனந்த குரல் எழுப்பி தனது கருவுற்ற மனைவியை கட்டித் தழுவி தூக்குகிறார்.