நைஜீரியாவில் இராணுவ விமானம் தீப்பற்றி விபத்து; 7 பேர் உடல் கருகி பலி!

1614061472 219093 hirunews 1
1614061472 219093 hirunews 1

நைஜீரியாவில் இராணுவ விமானம்ஒன்று தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அவ்விமானத்தில் பயணித்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

நைஜீரிய இராணுவத்துக்கு சொந்தமான ‘கிங் ஏர் 350’ ரகவிமான அந்நாட்டின் தலைநகர் அபுஜாவிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மின்னா நகரை நோக்கி 7பேருடன் புறப்பட்டுச் சென்றுள்ளது.

இந்நிலையில், விமானம் புறப்பட்டுச்சென்ற சிறிது நேரத்தில் விமானத்தின் என்ஜின் திடீரென செயலிழந்துள்ளது. இதனை அறிந்த விமானி விமானத்தை உடனடியாக மீண்டும் அபுஜாவிலுள்ள விமான நிலையத்துக்கு திருப்பி அவசரமாக தரையிறக்க முயற்சித்துள்ளார்.

எனினும், விமான நிலையத்தை நெருங்கிய வேளையில் விமானம் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்ததுநிலையத்துக்கு அருகில் உள்ள வயல் பகுதியில் விழுந்துள்ளது.

விழுந்த வேகத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்ததுடன் சில நிமிடங்களில் ஒட்டு மொத்த விமானமும் தீக்கிரையாகியுள்ளது.

விபத்தில் விமானத்தில் பயணித்த 7 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகியுள்ளர்.

இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக நைஜீரிய இராணுவம் தெரிவித்துள்ளது.