கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பஞ்சாப்பில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு!

201910182029502125 Amarinder Singh Appeals Imran Khan to Withdraw the service SECVPF
201910182029502125 Amarinder Singh Appeals Imran Khan to Withdraw the service SECVPF

பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது. இதையடுத்து, அம்மாநிலத்தில் மீண்டும் சில கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. வரும் மார்ச் 1 ஆம் திகதியில் இருந்து உள் அரங்கு கூட்டங்களில் 100-க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்ளக்கூடாது. திறந்த வெளி கூட்டங்களில் 200- க்கும் அதிகமானோர் கூடக்கூடாது என்று புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதேபோல், கொரோனா பரிசோதனைகளையும் அதிகப்படுத்த முதல் மந்திரி அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று காணொலி வாயிலாக ஆலோசனை நடத்திய அமரீந்தர் சிங், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தவும் அறிவுறுத்தினார்.

அதேபோல், முகக்கவசம் அணிதல் போன்ற கொரோனா தடுப்பு முறைகளை மக்கள் தீவிரமாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனையின் போது அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.