இந்தியாவில் சமூக வலைத்தளங்களுக்கு புதிய கட்டுப்பாடு

download 3 17
download 3 17

முகப்புத்தகம், டுவிட்டர், வட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு இந்தியாவில் புதிய கட்டுப்பாடுகள் விதித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு வெளியான அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

சமூக வலைத்தளங்களில், தேசவிரோதமானதாகவும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கக்கூடியதாகவும் அதிகாரிகள் கருதும் பதிவுகளை யார் முதலில் உருவாக்கியது என்பதை கண்டறியும் வசதி, கட்டாயம் இருக்க வேண்டும். அத்தகைய பதிவுகளை நீக்குமாறு அதிகாரிகள் உத்தரவிட்ட 36 மணி நேரத்துக்குள் அவற்றை நீக்க வேண்டும்.

புகார்களை விசாரிக்க சமூக வலைத்தளங்கள் ஒரு தலைமை அதிகாரி உள்பட 3 அதிகாரிகளை நியமிக்க வேண்டும். அவர்கள் இந்தியாவில் வசிக்க வேண்டும்.

புகார்கள் குறித்தும், அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், நீக்கப்பட்ட பதிவுகள் குறித்தும் மாதந்தோறும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். சமூக வலைத்தளங்கள் தொடர்பான விதிமுறைகளை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நிர்வகிக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், நெட்பிளிக்ஸ், அமசோன் பிரைம் வீடியோ, ஹொட்ஸ்டார், ஜீ -5 உள்ளிட்ட ஓ.டி.டி. தளங்கள் மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு கடிவாளம் போடும்வகையில், இந்திய மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.