ரஷ்யாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 446 பேர் பலி!

vikatan 2020 07 2fba8b1c b2a7 40bb a352 24cb0a806ab3 f17509e3 928c 4468 b1dd 54a6d566f1a1 1
vikatan 2020 07 2fba8b1c b2a7 40bb a352 24cb0a806ab3 f17509e3 928c 4468 b1dd 54a6d566f1a1 1

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் ரஷ்யா 4-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவில் மேலும் 11,198 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 42,12,100 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு ஒரே நாளில் 446 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு பலியானோர் எண்ணிக்கை 84 ஆயிரத்து 876 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 37.67 இலட்சத்தைக் கடந்துள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.