உலக நாடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

global 768x384 1
global 768x384 1

உலக நாடுகள் புவி வெப்பமடைதல் குறித்து சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் அடுத்த சில ஆண்டுகளில் உலக வெப்பமாதல் மேலும் 1.5 டிகிரி செல்சியஸ் உயரும் என தெரியவந்துள்ளது.

சர்வதேச அமைப்பினால் மேற்கொண்ட ஆய்விலிருந்து இது தெரியவந்துள்ளது.

இந்த சூழ்நிலையை உலகம் எதிர்கொண்டால், அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று அது எச்சரித்துள்ளது.

எனவே, உலக வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த உலகெங்கிலும் உள்ள நாடுகள் இனிமேல் தயாராக இருக்க வேண்டும் என்று ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

புவி வெப்பமடைதல் குறித்து விடுத்துள்ள எச்சரிக்கை உலகிற்கு  பொது சிவப்பு எச்சரிக்கை என ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் தெரிவித்துள்ளார்.

புவி வெப்பமடைதலைக் கட்டுப்படுத்த உலகெங்கிலும் உள்ள நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்றும் பிரான்ஸ் மாநாடு தெரிவித்துள்ளது.