விஜயகாந்த் கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம்

vijayakanth new2
vijayakanth new2

தே.மு.தி.க. தலைவர் கப்டன் விஜயகாந்த் தன்னுடைய கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகிய கப்டன் விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிடர் கழகம், ரி. ரி. வி. தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை சந்தித்து வருகிறது. 

கூட்டணி சார்பாக தேமுதிக 60 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் விருத்தாச்சலம் தொகுதியில் கட்சியின் பொருளாளரும், கப்டன் விஜயகாந்தின் மனைவியுமான திருமதி பிரேமலதா விஜயகாந்த் வேட்பாளராக போட்டியிடுகிறார். 

விஜயகாந்தின் உடல்நிலையை கருத்தில்கொண்டு அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவாரா..! என்ற ஐயம் அனைவரிடத்திலும் இருந்தது.

ஆனால் நேற்று அவர் திருத்தணியில் தே.மு.தி.க. கட்சியின் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

பிரச்சாரத்தின் போது பொதுமக்களை வணங்கியும், கையசைத்தும் வாக்குகளை கேட்டார். 

இதனிடையே கடலூர் மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அக் கட்சியின் பொருளாளரும், முன்னணி தலைவருமான திருமதி பிரேமலதா விஜயகாந்த்திற்கு கொரோனா தொற்று இல்லை என மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்திருக்கிறார். 

இதனால் அவர் தொடர்ந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.