அமெரிக்காவில் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியதில் 5 பேர் பலி!

large 2018091513421559725 killed as army helicopter crashes i 21538
large 2018091513421559725 killed as army helicopter crashes i 21538

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் ஹெலிகாப்டர் ஒன்று சென்று கொண்டிருந்த போது ஆன்கரேஜ் என்ற இடத்தில் வைத்து ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் அதில் பயணித்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் ஒருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டார், அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.