இரு முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அனுமதிக்கும் சட்டத்தில் கையெழுத்திட்ட புடின்

unnamed 1 2
unnamed 1 2

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மேலும் இரு முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வழிவகுக்கும் ஒரு சட்டமூலத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

இது அவரது பதவிக் காலத்தினை 2036 வரை நீடிக்க வழிவகுக்கும்.

ஏற்கனவே இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக ஆட்சியில் இருக்கும் 68 வயதான ரஷ்ய ஜனாதிபதி புடின் திங்களன்று குறித்த சட்டமூலத்தில் கையெழுத்திட்டார் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தற்போது தனது நான்காவது ஜனாதிபதி பதவிக் காலத்தில் பணியாற்றி வரும் புடினின் பதவிக் காலம் 2024 இல் முடிவடையவுள்ளது.

திங்களன்று அறிவிக்கப்பட்ட புதிய சட்டம், அடுத்தடுத்த ஜனாதிபதி தேர்தல்களில் புடின் போட்டியிட விரும்பினால் அவருக்கு மேலும் ஈர் ஆறு ஆண்டு காலத்திற்கு ஜனாதிபதியாக பதவி வகிக்க அனுமதிக்கக்கூடும்.

இந் நிலையில் 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடலாமா என்ற தீர்மானத்தை பின்னர் அறிவிப்பேன் என்று புடின் கூறியுள்ளார்.