துருக்கியில் ஒரே நாளில் 42,551 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

close up of blood samples
close up of blood samples

துருக்கியில் ஒரே நாளில் 42,551 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 35 இலட்சத்தை கடந்துள்ளது.

துருக்கியில் கொரோனாவால் ஒரே நாளில் 193 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 32,456 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இதுவரை 31 இலட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 3.49 இலட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.