இந்தியாவில் நேற்று 1இலட்சம் பேருக்கு மேல் கொரோனா!

download 2 6
download 2 6

இந்தியாவில் நேற்று செவ்வாய்க்கிழமை மாத்திரம் மொத்தமாக 1.07 இலட்சத்திற்கும் அதிகமான புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த எண்ணிக்கையானது 2020 ஜனவரி 30 அன்று இந்தியாவில் முதல் கொரோனா நோயாளர் பதிவானதிலிருந்து ஒரே நாளில் அதிகளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட முதல் சந்தர்ப்பமாகும்.

அதேநேரம் இந்தியாவில் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாகவும் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை 1,03,558 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் அடுத்த நான்கு வாரங்கள் “மிகவும் முக்கியமானவை” என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரித்ததோடு, தொற்றுநோயின் இரண்டாவது அலைகளை கட்டுப்படுத்த மக்களின் பங்களிப்பையும் கோரியுள்ளது.