பிரேஸிலில் ஒரே நாளில் கொரோனாவால் 4,000ற்கு அதிகமானோர் பலி!

thumb large Brazil
thumb large Brazil

பிரேசிலில் முதன் முறையாக செவ்வாய்க்கிழமை மாத்திரம் கொரோனா தொற்றினால் 4,000 க்கும் அதிகமான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் மிக மோசமான நாளான நேற்றைய தினம் அங்கு மொத்தம் 4,195 உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன.

அதனால் நாட்டில் கொவிட்-19 காரணமாக ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை சுமார் 337,000 ஆக உள்ளதாக பிரேஸில் சுகாதார அமைச்சகம் புதன்கிழமை காலை அறிவித்துள்ளது.

212 மில்லியன் மக்களைக் கொண்ட பிரேஸில் கடந்த வாரத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு 2,757 கொவிட்-19 தொடர்பான உயிரிழப்புகளை பதிவு செய்துள்ளது.

பிரேசிலின் 27 மாநிலங்களில் 18 மாநிலங்கள் கொரோனா தொற்று காரணமாக மிகவும் அவசரகால நிலையில் உள்ள நிலையில் 13 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா நோயாளர்கள் அங்கு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.