தமிழகத்தில் தேர்தல் கருத்துக்கணிப்புக்கு தடை!

large rtujyjc 81489
large rtujyjc 81489

தமிழகத்தில் தேர்தலுக்கு பின் கருத்துக்கணிப்பை வெளியிட எதிர்வரும் 29 ஆம் திகதி வரை தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

நாடாளுமன்ற இடைத்தேர்தல் மற்றும் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களிலும் மார்ச் 27 ஆம் திகதி முதல் ஏப்ரல் 29 ஆம் திகதி வரை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பை நடத்தவும், அதன் முடிவுகளை வெளியிடவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் ஒரே கட்டமாக நேற்று தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. அசாமுக்கும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது. ஆனால், மேற்கு வங்கத்திற்கு 3 கட்ட தேர்தல் மட்டும் முடிவடைந்துள்ளது. மேலும், 5 கட்ட தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இறுதி மற்றும் 8-ம் கட்ட வாக்குப்பதிவு வரும் 29 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

எனவே, அன்றைய தினம், இரவு 7.30 மணிக்குப் பின்னரே, தமிழகத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நடத்தவும், அதன் முடிவுகளை அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் அல்லது வேறு விதத்தில் வெளியிட தடை விதிக்கப்பட்ட காலமாக, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951 126ஏ பிரிவு துணைப்பிரிவு 1-ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தின் படி, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.