சரத்குமார் – ராதிகாவுக்கு ஒரு வருட சிறை!

rathika
rathika

காசோலை மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார் மற்றும் நடிகை ராதிகாவுக்கு தலா ஒரு வருட சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் எம்.பி., எம்.எல்.ஏக்கள் தொடர்பான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

‘இது என்ன மாயம்“ என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக ரேடியண்ட் நிறுவனத்திடம் பணம் பெற்ற விவகாரத்தில், பணத்தை திரும்ப அளிக்காததால், ரேடியண்ட் நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

2014 ஆம் ஆண்டு ரூ.1.50 கோடி ரேடியன்ஸ் நிறுவனத்திடம் மேஜிக் ப்ரேம்ஸ் நிறுவனம் சார்பில் கடனாக பெறப்பட்டுள்ளது.

கடனைத் திருப்பி அளிப்பதில் மேஜிக் ப்ரேம்ஸ் நிறுவனம் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சரத்குமார் மீது 7 வழக்குகளும், ராதிகா மீது இரண்டு வழக்குகளும் தொடரப்பட்டன.

இது தொடர்பான விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம், இருவருக்கும் தலா ஒரு வருட சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் மேஜிக் ப்ரேம் நிறுவன பங்குதாரர் லிஸ்டன் ஸ்டீபனுக்கும் நீதிமன்றம் ஒரு வருடமும் சிறை தண்டனை விதித்துள்ளது.

அதேநேரம், இந்த சிறை தண்டனைக்கு எதிராக நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா உள்ளிட்ட மூன்று பேரின் சார்பில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த மேன்முறையீட்டு மனு இன்று மாலைக்குள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.