மாறிவரும் மக்களின் மனநிலை – மாட்டை உயிரோடு புதைக்கும் காட்சி

cow
cow

விவசாயப் பயிர்களை சூறையாடி வரும் நில்கை என்ற காட்டு மாடுகளை அரசு அனுமதியுடன் உயிரோடு புதைக்குழிக்குள் போட்டு புதைக்கும் பதைபதைக்கும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. ஒரு உயிரை உயிரோடு புதைக்கும் அளவுக்கு மக்களின் மனநிலை மாறி வருகிறதோ… என்று எண்ணத்தோன்றுகிறது.

பீகார் மாநிலத்தில் காணப்படும் நில்கை எனப்படும் ஒருவகை காட்டுமாடுகள் விவசாயிகளின் பயிர்களை சேதப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. மாட்டை சாதாரணமாக விரட்ட முடியாத விவசாயிகள் இந்த பிரச்சினை குறித்து அரசின் கவனத்துக்குச் எடுத்துச் சென்றனர்.

இது குறித்து ஆய்வு செய்த மாநில அரசும் நில்கை மாடுகளை கொல்வதற்கு ஒப்புதல் அளித்தது. இதைத்தொடர்ந்து பீகாரின் வைஷாலி மாவட்டத்தில் மட்டும் 300 நில்கை மாடுகள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக சிலரை மாநில வனத்துறை தற்காலிகமாக பணிக்கு நியமித்துள்ளது. இவர்கள் மாடுகளை வேட்டையாடி வருகின்ற நிலையில் இவர்களிடம் காயப்பட்ட நிலையில் சிக்கிய மாடு ஒன்றினை உயிரோடு புதைக்குழிக்குள் போட்டு, JCB இயந்திரம் மூலம் உயிரோடு மணலால் புதைக்கும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. இந்த கொடூரமான செயல் பார்ப்போரின் மனதை பதைபதைக்க வைக்கிறது,

நவீன உலகின் வளர்ச்சி மக்களின் மனநிலையை மழுங்கச்செய்து வருவதற்கு இதுவும் ஒரு உதாரணம்…

இந்த கொடூர செயலுக்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.