இளவரசர் பிலிப் காலமானார்!

625.0.560.350.160.300.053.800.668.160.90 1
625.0.560.350.160.300.053.800.668.160.90 1

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவரான இளவரசர் பிலிப்  காலமானதாக பகிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

சில காலம் சுகயீனமுற்றிருந்த இவர் தனது 99 ஆவது வயதில் அவர் சற்றுமுன்னர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எடின்பர்க் டியூக் என்றும் அழைக்கப்படும் பிலிப், 2017 இல்  தனது பொறுப்புகளில் இருந்து ஓய்வு பெற்றார், அதன்பின்னர் பொது நிகழ்ச்சிகளில்  அரிதாகவே கலந்து கொண்டார்.

இந்நிலையில், இங்கிலாந்தின் தற்போதைய கொரோனா  ஊரடங்கு காலப்பகுதியில், அவர் லண்டனுக்கு மேற்கே உள்ள வின்ட்சர் கோட்டையில் ராணியுடன் தங்கியிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில் அதிக காலம் இளவரசராக இருந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.