மியன்மாரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 700 பேர் கொலை!

1618280077 5350124 hirunews
1618280077 5350124 hirunews

மியன்மார் இராணுவத்திற்கு எதிராக அந்த நாட்டில் பொதுமக்கள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டங்களின் மீதான தாக்குதல்களில் இதுவரை 700 பேர் கொல்லப்பட்டனர்.

பர்மாவின் அரசியல் கைதிகளுக்கான அமைப்பு இதனை தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி மியன்மாரின் தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவர் ஆங் சாங் சூகி உள்ளிட்ட முக்கியஸ்த்தர்களை அந்த நாட்டு இராணுவம் கைது செய்ததுடன், பின்னர் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து அங்கு ஒரு வருட காலத்திற்கு இராணுவ ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்தநிலையில், விளக்கமறியலில் உள்ள அரசியல் தலைவர்களை உடன்விடுவிக்க வேண்டும் எனவும், இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு எதிராகவும் மியன்மார் பொதுமக்களால் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

அதனை கட்டுப்படுத்த மியன்மார் இராணுவத்தினர் பொதுமக்கள் மீது வன்முறைகளை பிரயோகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.