அமீரகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 85675 ஆக அதிகரிப்பு!

115072101 bd1d4db8 0cf5 46f7 bdf8 569110559c46
115072101 bd1d4db8 0cf5 46f7 bdf8 569110559c46

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு இலட்சத்து 93 ஆயிரத்து 892 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில் 1,928 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அமீரகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 85 ஆயிரத்து 675 ஆக அதிகரித்துள்ளது. இதில், நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1,719 பேர் பூரண குணமடைந்து தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதன்மூலம் அமீரகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 70 ஆயிரத்து 175 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று 2 பேர் பலியானார்கள். இதன் காரணமாக அமீரகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,533 ஆக உயர்ந்தது. தற்போது 13 ஆயிரத்து 967 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொதுமக்கள் தொடர்ந்து கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வலியுறுத்தப்படுகிறார்கள்.