உலக விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீட்டுக்கு சீனா கண்டனம்

556109
556109

உலக விவகாரங்களில் உயர்ந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டாம். அத்துடன் இறுதி கருத்து காணப்படுவதாகவும் கருத்துக்களை பகிர வேண்டாம் என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி அமெரிக்காவை இலக்கு வைத்து கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் பெய்ஜிங்குடனான பேச்சுவார்த்தைகளுக்காக வொஷிங்டன் முன்வைக்கும் ஒரு தலைப்பட்சமான கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை தென் சீனா மோர்னிங் போஸ்ட் தெரிவித்துள்ளது.

அத்துடன், சீனாவுடனான பேச்சுவார்த்தைகளுக்கான கதவு எப்போதும் திறந்திருக்கும். ஆனால் பேச்சுவார்த்தை சமமான அடிப்படையிலும் பரஸ்பர மரியாதையுடனும் முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகில் எந்தவொரு தேசமும் முழு உலகிற்கும் தனே உயர்ந்ததாக இருப்பதாக கூறுவதை சீனா ஏற்றுக்கொள்ளாது ஒரு தேசம் தன்னைத்தானே உயர்த்திக்கொள்ள முடியும். ஆனால் அந்த உயர்வைப் பயன்படுத்தி அனைத்து தேசங்களினதும் உலக விவகாரங்களினதும் இறுதி தீர்மானத்தினை எடுக்கும் நிலையை கொண்டிருப்பதாக கூறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது.

இந்தவிதமான நிலைமையை அமெரிக்கா தொடர்ந்தால் அதனை சீனா தயக்கமின்றி எதிர்கொள்ளும். எந்த சந்தர்ப்பத்திலும் அஞ்சப்போவதில்லை என்றார்.

கொரோனா வைரஸ் பரவல் உட்பட பல விடயங்களில் சீனாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு சிக்கல்களை அடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.