ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

earthquake
earthquake

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள புஷேர் நகரில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.‌ இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 புள்ளிகளாக பதிவானது. இது பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஈரான் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்ட மையப்பகுதியில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் ஈரானின் புஷேர் அணு உலை அமைந்துள்ளது.

நிலநடுக்கம் காரணமாக அணு உலையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. புஷேர் அணு உலையானது ரிக்டர் 8 வரையிலான நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.