காலநிலை உச்சி மாநாட்டில் ஜின்பிங்கை சந்திக்கும் பைடன்

2019 05 24T005522Z 676039096 RC1E73B21730 RTRMADP 3 CHINA ECONOMY HENAN POLLUTION
2019 05 24T005522Z 676039096 RC1E73B21730 RTRMADP 3 CHINA ECONOMY HENAN POLLUTION

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இந்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் இணையவழியூடான மெய்நிகர் காலநிலை உச்சி மாநாட்டில் கலந்து கொள்வார் என்று பீஜிங் புதன்கிழமை கூறியுள்ளது.

உலகின் மிகப்பெரிய கார்பன் மாசுபடுத்தும் இரு நாடுகளான சீனாவும் அமெரிக்காவும் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட ஏனைய நாடுகளுடன் ஒத்துழைக்க கடந்த வாரம் ஒப்புக் கொண்டதன் விளைவாக இந்த இணையவழி சந்திப்பு இடம்பெறவுள்ளது.

வியாழக்கிழமை புவி தினத்தன்று தொடங்கும் கூட்டத்திற்கு ஜின்பிங் மற்றும் ரஷ்யாவின் விளாடிமிர் புட்டின் உட்பட 40 உலகத் தலைவர்களை பைடன் அழைத்திருக்கிறார்.

மேலும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த செயல்முறையிலிருந்து விலகிய பின்னர் காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் வொஷிங்டனும் கைகோர்த்துள்ளது.

பைடன் ஜனாதிபதியான பின்னர் இரு தலைவர்களுக்கிடையேயான (சீன, அமெரிக்க) முதல் சந்திப்பு இந்த மெய்நிகர் உச்சி மாநாட்டில் இடம்பெறும்.

வொஷிங்டனும் பீஜிங்கும் ஹாங்கொங் விடயத்தில் சீனாவின் கொள்கைகள் மற்றும் அதன் வடமேற்கு ஜின்ஜியாங் பிராந்தியத்தில் உய்குர்ஸை சிறுபான்மையினரை நடத்தும் விதம் போன்ற விடயங்களில் முரண்பட்ட தன்மையினை கொண்டுள்ளது.

பீஜிங் அதன் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதை நிராகரிக்கிறது.

அமெரிக்கா மற்றும் சீனா இல்லாமல் காலநிலை மாற்றத்திற்கான உலகளாவிய தீர்வு எதுவும் சாத்தியமில்லை, ஏனெனில் உலகின் முதல் இரண்டு பொருளாதாரங்களும் உலகின் மொத்த பசுமை இல்ல வாயு உமிழ்வுகளில் கிட்டத்தட்ட 50 சதவீதத்தை கொண்டுள்ளன.