ஜப்பானின் பாலியல் அடிமைத்தன இழப்பீட்டு கோரிக்கையை நிராகரித்த தென்கொரியா!

800
800

தென்கொரிய பாலியல் அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் தங்கள் போர்க்கால துன்பங்கள் தொடர்பாக ஜப்பானிய அரசாங்கத்திடம் இழப்பீடு கோரியதை தென் கொரிய நீதிமன்றம் புதன்கிழமை நிராகரித்தது.

இந் நிலையில் பாலியல் அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்டவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆர்வலர்கள் இந்த முடிவைக் கண்டித்து, சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றமானது பெண்களின் மரியாதை மற்றும் கெளரவத்தை மீட்டெடுப்பதற்கான அவர்களின் போராட்டங்களை புறக்கணித்து வருவதாகக் கூறினார்.

அது மாத்திரமன்றி அவர்கள் ஒரு அறிக்கையில் வாதிகள் மேல்முறையீடு செய்வார்கள் என்றும் கூறியுள்ளனர்.

தென் கொரியாவின் யோன்ஹாப் செய்தி நிறுவனத்தின்படி, ஜப்பானிய அரசாங்கத்தை சர்வதேச சட்டத்தின் கொள்கைகளின் கீழ் சிவில் அதிகார வரம்பிலிருந்து விலக்க வேண்டும் என்று சியோல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஜப்பானிய அரசாங்கத்திற்கு 100 மில்லியன் வோன் (91,000 அமெரிக்க டொலர்) உயிர் பிழைத்த ஒவ்வொரு பெண்கள் மற்றும் இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் செலுத்துமாறு அதே நீதிமன்றம் கடந்த ஜனவரியில் உத்தரவிட்டிருந்தது.

ஜப்பானிய அதிகாரிகள் இந்த தீர்ப்பை கோபமாக நிராகரித்தனர், தென் கொரியா “சட்டவிரோத” கோரிக்கைகளை முன்வைத்ததாகவும், சர்வதேச சட்டம் மற்றும் இருதரப்பு உறவுகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தியதாகவும் குற்றம் சாட்டினார்.

1965 ஆம் ஆண்டு உடன்படிக்கையின் கீழ் அனைத்து போர்க்கால இழப்பீட்டு சிக்கல்களும் தீர்க்கப்பட்டதாக ஜப்பான் வலியுறுத்தியது.

2016 ஆம் ஆண்டில் ஜப்பானிய அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடர்ந்த 20 வாதிகளில், இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானிய இராணுவ விபச்சார விடுதிகளில் பணிபுரிய வேண்டிய கட்டாயத்தில் இருந்த 11 பெண்களும், பின்னர் இறந்த ஏனைய பெண்களின் உறவினர்களும் அடங்குவர்.

கொரிய தீபகற்பத்தில் 1910-45 காலனித்துவ ஆட்சியின் போது ஜப்பானிய தொழிற்சாலைகள் மற்றும் சுரங்கங்களில் பணிபுரிய கட்டாயப்படுத்தப்பட்ட கொரியர்களுக்கு ஜப்பான் இழப்பீடு வழங்கக் கோரி 2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து தென் கொரிய நீதிமன்றத் தீர்ப்புகளின் தொடர்ச்சியாக பதட்டங்கள் மேலும் அதிகரித்தமையும் குறிப்பிடத்தக்கது.