இந்தோனேசிய நீர்மூழ்கி கப்பல் காணாமல்போனது

21 608154a143715
21 608154a143715

காணாமல் போன கடற்படை நீர்மூழ்கிக் கப்பலின் 53 பணியாளர்களை மீட்பதற்கு இந்தோனேசியாவுக்கு 72 மணித்தியாலங்கள் உள்ளதாக அந்த நாட்டு கடற்படை அறிவித்துள்ளது.

காணாமல் போயுள்ள 53 பணியாளர்களுக்கு மேலும் 72 மணி போதுமான பிராணவாயு குறித்த நீர்மூழ்கிக் கப்பலில் உள்ளதாக அந்த நாட்டு கடற்படையின் பேச்சாளர் அட்மிரல் ஜூலியஸ் விட்ஜோஜோனோ தெரிவித்துள்ளார்.

கே.ஆர்.ஐ நங்கலா-402 என்ற குறித்த கப்பல் கடந்த புதன்கிழமை அதிகாலை பாலி கடற்கரையில் இருந்து 100 கிலோமீற்றர் தொலைவில் காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த கப்பலில் 53 பணியாளர்கள் இருந்ததோடு அவர்களை தேடும் பணியில் 6 போர்க் கப்பல்கள், ஒரு உலங்கு வானூர்தி மற்றும் 400 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் சிங்கப்பூர் மற்றும் மலேஷியா ஆகிய நாடுகளும் தேடுதல் பணிக்காக தமது கப்பல்களை அனுப்பியுள்ளன.

இதுதவிர அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளும் தமது உதவிகளை வழங்கியுள்ளன.

ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட குறித்த நீர்மூழ்கிக் கப்பல் பயிற்சி நடவடிக்கையின் போது காணாமல் போனது.

குறித்த கப்பல் தமது தொடர்பை இழந்ததோடு பதிலளிக்கத் தவறி விட்டதாக இந்தோனேசிய கடற்படை அறிவித்தது.

இந்தநிலையில் நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பை இழந்த பகுதி அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும் அது மிகவும் அழமான பகுதி என இந்தோனேசிய கடற்படை பேச்சாளர் அட்மிரல் ஜூலியஸ் விட்ஜோஜோனோ தெரிவித்துள்ளார்.