இந்தியாவுக்கு 135 கோடி நிதி உதவி அளிக்கும் கூகுள்

150811052858 sundar pichai afp 640x360 afp nocredit
150811052858 sundar pichai afp 640x360 afp nocredit

கொரோனாவால் கடுமையான நெருக்கடியை சந்தித்துள்ள இந்தியாவுக்கு 135 கோடி ரூபாய் நிதி உதவி அளிப்பதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு சர்வதேச நாடுகள் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளன.

அமெரிக்கா, பிரான்ஸ், கனடா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு துணை நின்று தேவையான உதவியை அளிக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளன.

இந்நிலையில், கொரோனாவால் மிகக் கடுமையான நெருக்கடியை சந்தித்துள்ள இந்தியாவுக்கு கூகுள் நிறுவனம் 135 கோடி ரூபாய் நிதி உதவியை அளிக்க இருப்பதாக சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

அதேபோல், மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி சத்ய நாடெல்லா, இந்தியாவின் கொரோனா சூழல் குறித்து தெரிவித்திருப்பதாவது,

இந்தியாவில் தற்போது நிலவும் சூழல் கடும் வேதனை அளிக்கிறது. ஒட்சிசன் கருவிகள் போன்ற மருத்துவ பொருட்களை வழங்குவதற்கு மைக்ரோசொப்ட் நிறுவனம் தொடர்ந்து ஆதரவு அளிக்கும்” என தெரிவித்துள்ளார்.