கனடாவில் கொரோனா தொற்றினால் 12 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

depositphotos 343962690 stock photo illustration corona virus microbe infection
depositphotos 343962690 stock photo illustration corona virus microbe infection

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 12இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக வைரஸ் தொற்றினால், 12இலட்சத்து இரண்டாயிரத்து 737பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக 24ஆயிரத்து 117பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றினால், ஏழாயிரத்து 748பேர் பாதிக்கப்பட்டதோடு 52பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 83ஆயிரத்து 354பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 355பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், இதுவரை பத்து இலட்சத்து 95ஆயிரத்து 266பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.