சிம்பாப்வே முன்னாள் அதிபர் காலமானார்.

mukabe
mukabe

சிம்பாப்வே முன்னாள் ஜனாதிபதி 95 வயதான ரொபேர்ட் முகாபே உடல்நலக்குறைவால் சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானதாக கூறப்படுகிறது.

சிம்பாப்வேயின் ஜோசுவா நகோமோடு மக்கள் தொகையில் சிறுபான்மையினராக இருந்த வெள்ளையரின் ஆட்சிக்கு எதிராக கொரில்லா போர் தொடுக்கும் தலைவர்களில் ஒருவராக பிரபலமானார். சிம்பாப்வே விடுதலை பெற்ற பின் நாயகனாக அந்நாட்டு மக்களால் கொண்டாடப்பட்ட முகாபே தனது ஆட்சியின் இறுதிக் காலத்தில் ஊழல் மிக்க சர்வாதிகாரியாகப் பார்க்கப்பட்டார்.

1924ஆம் ஆண்டு பெப்ரவரி 21 அன்று ரோடேசியாவில் (ஜிம்பாப்வேயின் முன்னாள் பெயர்) அவர் பிறந்தார். சிம்பாப்வே 1980-ல் சுதந்திரம் பெற்றதில் இருந்து 2017 வரை 37 ஆண்டு காலம் முகாபே அதிபராக இருந்தார். 1980 ல் காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுவிக்கப்பட்டதிலிருந்து முகாபே சிம்பாப்வேயை ஆட்சி செய்தார், நவம்பர் 2017 இல் ஒரு நடைமுறை சதித்திட்டத்தில் அவர் தூக்கியெறியப்பட்டார்.


அவரது நீண்டகால கூட்டாளியான எம்மர்சன் மனாங்காக்வா, முகாபேவுக்குப் பின் ஜனாதிபதியாக இராணுவத்தின் ஆசீர்வாதங்களுடன் வெற்றி பெற்றார். அதைத்தொடர்ந்து ஜனாதிபதி பதவிக்கு கடந்த 2018ம் ஆண்டு ஜூலை 30-ம் திகதி நடைபெற்ற தேர்தலில் தற்காலிக ஜனாதிபதி எம்மர்சன் ம்நங்காக்வா-வை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் நெல்சன் சாமிசா போட்டியிட்டார். இந்த தேர்தலில் சுமார் 50 சதவீதம் வாக்குகளைப் பெற்ற எம்மர்சன் ம்நங்காக்வா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதையடுத்து அவர், கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் 18ஆம் திகதி நாட்டின் ஜனாதிபதியாக பதவி ஏற்றார்.