அமீரகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,710 பேருக்கு கொரோனா!

covid19 1
covid19 1

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட ஒரு இலட்சத்து 95 ஆயிரத்து 166 டிபிஐ மற்றும் பி சி ஆர் பரிசோதனை முடிவுகளில் 1,710 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் தற்போது பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 16 ஆயிரத்து 301 ஆக உயர்ந்தது.

இதில் நேற்று மட்டும் 1,551 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக தற்போது குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 இலட்சத்து 97 ஆயிரத்து 140 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று ஒரே நாளில் 2 பேர் பலியானார்கள். இதனால் தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 1,580 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 17 ஆயிரத்து 581 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.