கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களுக்கு குருதியுறைதல் ஏற்படுவதாக ஆய்வில் தகவல்

bloodtestTubescrop 1280x640 1

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களுக்கு குருதியுறைதல் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக புதிய ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

தொற்றிலிருந்து குணமடைந்து ஒரு மாதத்தை பூர்த்திசெய்த சுமார் 30 தொற்றாளர்களிடமிருந்து குருதி மாதிரியை பெற்று சிங்கப்பூர் நிபுணர் குழுவொன்று இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதற்கமைய, இந்த ஆய்வின் மூலம், அவர்கள் அனைவருக்கும் குருதியுறைதல் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.