பாலஸ்தீன நாடாளுமன்ற தேர்தல் ஒத்திவைப்பு!

16 25 21 25 7 20191 e1564083116524
16 25 21 25 7 20191 e1564083116524

மே 22 நடத்த திட்மிடப்பட்டுள்ள நாடாளுமன்றத் தேர்தலை ஒத்திவைப்பதாக பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.

ஆக்கிரமிக்கப்பட்ட நகரமான கிழக்கு ஜெருசலேமில் தேர்தலை நடத்த இஸ்ரேல் நிராகரித்ததை மேற்கோளிட்டு, வாக்களிப்பதில் இருந்து விலக்கப்பட்ட ஜெருசலேமுடன் தேர்தலை நடத்த மாட்டோம் என்று அப்பாஸ் கூறினார்.

“ஆக்கிரமிக்கப்பட்ட ஜெருசலேம் இல்லாமல் நாங்கள் தேர்தலுக்கு செல்ல மாட்டோம். மேற்குக் கரையைப் போலவே ஜெருசலேமிலும் தேர்தல்கள் வேண்டும்” என்று அவர் தொலைக்காட்சி உரையில் கூறினார்.

ஜெருசலேமில் தேர்தலை நடத்த வேண்டும் என்ற பாலஸ்தீனிய கோரிக்கைக்கு இஸ்ரேலிய தரப்பு பதில் அளிக்கவில்லை.

இஸ்ரேலிய தரப்பிலிருந்து பதில் கிடைக்காததால் ஏற்பட்ட ஏமாற்றத்தை ஐரோப்பிய ஒன்றியம் பாலஸ்தீனிய தரப்பினருக்கு தெரிவித்ததாக அப்பாஸ் மேலும் கூறினார்.

எவ்வாறாயினும் ஜெருசலேமில் தேர்தலை நடத்த இஸ்ரேல் அனுமதித்தவுடன், ஒரு வாரத்திற்குள் தேர்தல்களை நடத்துவதாகவும் பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் உறுதியளித்துள்ளார்.