பிரான்சிலும் பரவியது இந்தியாவின் உருமாறிய கொரோனா!

download 4 12
download 4 12

பிரான்சில் முதல் முறையாக இந்தியாவில் காணப்படும் பி .1.617 உருமாறிய கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்குச் சென்று வந்த தென்மேற்கு பிரான்சில் வசிக்கும் ஒரு பெண்ணுக்கே குறித்த வைரஸ் தொற்று முதல் முறையாக இன்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவுக்குச் சென்று வந்த மற்ற இருவரும் தென்கிழக்கு பிரான்சில் பி .1.617 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த வைரஸ் இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட மாதிரிகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் வேகம் எடுப்பதற்கு இந்த வைரஸ் காரணமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த வைரஸ் பரவல் 17 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.