இந்தியாவிலிருந்து அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் வெளிநாடுகளுக்கு அனுப்பபடாது

download 8 5
download 8 5

இந்தியாவினால் கொவிட்-19 தடுப்பூசி விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், அந்த செயற்பாடுகள் மீள ஆரம்பிக்க இன்னும் காலம் எடுக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்திய ஊடகங்கள் இதனை தெரிவிக்கின்றன.

இந்தியாவின் சீரம் நிறுவகத்தில் உற்பத்தியாகின்ற அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளை, இந்திய அரசாங்கம் இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு நன்கொடையாக வழங்கியது.

இந்த நடவடிக்கைகள் உற்பத்தி பற்றாக்குறை காரணமாக இடை நிறுத்தப்பட்டது.

அத்துடன் சீரம் நிறுவனத்தின் வர்த்தக ரீதியான தடுப்பூசி ஏற்றுமதியும் இடை நிறுத்தப்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவில் கொவிட் 19 பரவல் அதிதீவிரமடைந்துள்ள நிலையில், இப்போதைக்கு தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்படுகிறது.