ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

stalin 1
stalin 1

தமிழக சட்டசபைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் அமோக வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ளது. அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். அவருக்கு நாடு முழுவதிலும் இருந்து தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தவண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், பிரதமர் மோடியும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மு.க.ஸ்டாலின் மற்றும் திமுகவுக்கு எனது வாழ்த்துக்கள். நாட்டின் முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்கும், பிராந்திய அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கும், கொரோனா தொற்றுநோயை ஒழிக்கவும் நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம்’ என கூறி உள்ளார்.

மேலும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்த தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள பிரதமர் மோடி, மாநிலத்தின் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம் என்றும், புகழ்பெற்ற தமிழ் கலாச்சாரத்தை மேலும் பிரபலப்படுத்துவோம் என்றும் உறுதியளித்தார்.

இதேபோல் கேரளா, மேற்கு வங்காளத்தில் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு அளித்த மக்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். தேர்தலில் கடுமையாக உழைத்த கட்சியினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.