பொறுப்புடன் பணியாற்றுவோம் – எடப்பாடி பழனிசாமி

o panneerselvam edappadi palanisamy 700x375 1
o panneerselvam edappadi palanisamy 700x375 1

அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கையொன்றை நேற்று (03) வெளியிட்டுள்ளனர்.

அதில், தமிழக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி என்ற பெரும் பொறுப்புடன் அ.தி.மு.க.வின் கொள்கை வழிநின்று பணியாற்றுவோம் என அறிவித்துள்ளனர்.

அத்துடன், தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும், தமக்கு வாக்களித்த வாக்காளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும், தொடர்ந்து 10 ஆண்டு காலம் நடைபெற்ற அ.தி.மு.க. அரசு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக ஆற்றியிருக்கும் அரும் பணிகளை மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள் என குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், நிர்வாகம் என்ற நாணயத்தின் ஒருபக்கம் ஆளும் கட்சியாகவும் மற்றொரு பக்கம் எதிர்க் கட்சியாகவும் இருக்கும்.

எனவே, தமிழக சட்டமன்றத்திலும் ஆட்சி நிர்வாகத்திலும் எதிர்க்கட்சி என்ற பெரும் பொறுப்புடன் பணியாற்றுவோம் என எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.