கனடாவில் சிறுவர்களுக்கும் கொவிட் தடுப்பூசி

3010034 poster 1920 2 the truth about kids and social media 1024x576 1
3010034 poster 1920 2 the truth about kids and social media 1024x576 1

பைஸர் கொவிட்-19 தடுப்பூசியை 12 முதல் 15 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கு செலுத்துவதற்கு கனடா அனுமதியளித்துள்ளது.

குறித்த வயதினருக்கு தடுப்பூசியை செலுத்த நடவடிக்கை எடுத்த உலகின் முதலாவது நாடாக கனடா பதிவாகியுள்ளது.

மூன்று ஆய்வக பரிசோதனைகளின் முடிவுகளின்படி, கனேடிய சுகாதார அமைச்சு இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இந்த இளம் வயதினரிடையே பயன்படுத்தும்போது, குறித்த தடுப்பூசி பாதுகாப்பானதாகவும், செயலாற்றல் உடையதாகவும் இருக்கும் என்றும் கனேடிய சுகாதார அமைச்சின் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

16 வயதிற்கு மேற்பட்டோருக்கு பைஸர் தடுப்பூசியை செலுத்த ஏற்கனவே கனடா அனுமதி வழங்கியுள்ள நிலையில், தற்போது இந்தத் தீர்மானமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.